/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேரோட்டத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு அகற்ற ஹிந்து முன்னணி கோரிக்கை
/
தேரோட்டத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு அகற்ற ஹிந்து முன்னணி கோரிக்கை
தேரோட்டத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு அகற்ற ஹிந்து முன்னணி கோரிக்கை
தேரோட்டத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு அகற்ற ஹிந்து முன்னணி கோரிக்கை
ADDED : ஏப் 21, 2025 05:48 AM
தேவகோட்டை: தேவகோட்டை வெள்ளையன் ஊருணி மேற்குப் பகுதியில் கோதண்டராமர் சுவாமி கோவில், ரங்க நாத பெருமாள் கோவில் உள்ளது.
வெள்ளையன் ஊருணி ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலம்பணி தேவஸ்தானத்திற்குரிய கலங்காது கண்ட விநாயகர் கோவிலுக்கு சொந்தமானது. விநாயகர் கோவில் மற்றும் வெள்ளையன் ஊருணியை சுற்றி கடைகள் உள்ளன.
இதற்கு சிலம்பணி தேவஸ்தானத்தினர் வாடகை வசூலிக்கின்றனர். ஆரம்பத்தில் ஊருணியை சுற்றி சுமார் 10 அடி நீளத்திற்கு சிறு கடைகள் நிறுவனங்கள் இருந்தன.
தற்போதோ போட்டி போட்டு தார் ரோடே தெரியாத நிலையில் கடைகளை நீட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
சாதாரண நாட்களிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் நிலையில் கோவில் திருவிழாக்களின் போது சுவாமி வீதி உலாவிற்கு சிரமமாக இருக்கிறது. தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் தேர் இழுக்கும் போது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து ஹிந்து முன்னணி நகர் தலைவர் சுரேஷ் கூறியதாவது, ஆண்டு தோறும் பக்தர்கள் சிரமம் அடைக்கின்றனர்.
நகராட்சி, போலீசாருக்கு புகார் செய்துள்ளோம். சில நாட்களில் தேரோட்டம் நடக்க உள்ளது. அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.

