sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அறிவியலுக்கு அப்பாற்பட்டது ஹிந்து சமயம்

/

அறிவியலுக்கு அப்பாற்பட்டது ஹிந்து சமயம்

அறிவியலுக்கு அப்பாற்பட்டது ஹிந்து சமயம்

அறிவியலுக்கு அப்பாற்பட்டது ஹிந்து சமயம்


ADDED : ஏப் 28, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: ஹிந்து சமயம் அறிவியலுக்கும் அப்பாற்பட்டது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன என தேவகோட்டையில் நடந்த பெரியபுராண சொற்பொழிவு நிகழ்வில் இலக்கியமேகம் சீனிவாசன் பேசினார்.

அவர் பேசியதாவது, -

ஆலய வழிபாடு ஹிந்து சமயத்தில் இன்றியமையாத ஒன்று. ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் கோயில்கள் அவசியமா என ஒருவர் கேட்டார். விவேகானந்தர் கேள்வி கேட்ட வரை நோக்கி தண்ணீர் கொண்டு வரும்படி கூறினார்.

அவரும் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது சுவாமி தண்ணீர் தானே கேட்டேன் செம்பு எதற்கு என்று கேட்டார். பக்தரும் செம்பு இல்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும் என பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் அமைதியாக இது போலத்தான் எங்கும் நிறைந்திருக்கும் ஈசனையும் ஒரு ஆலயத்தில் எழுந்தருள செய்து அதன் மூலம் வழிபடுகின்றோம் என பதில் அளித்தார். நாம் நமது சமயத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர் சொல்வதற்கு முன்பே ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோயில் புவியீர்ப்பு விசையை நமக்குக் காட்டுகின்றது.

ஒரு அணுவின் சிதறல் நடராஜர் வடிவத்தை ஒத்து இருப்பதாக அறிவியலாளர்கள் வியந்து பார்க்கின்றனர். சந்திராயன் 2 எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் சந்திரனுக்கு அருகில் புதன் இருப்பதை காட்டியது.

அதே நாளில் நமது பஞ்சாங்கத்தில் உள்ள ஒன்பது கட்டத்தில் ஒன்றில் சந்திரனும் புதனும் ஒன்றாக இருந்தது. இதை வைத்து ஹிந்து சமயம் அறிவியலுக்கும் அப்பாற்பட்டது என்பதை அறியமுடிகிறது. சிவபூஜை செய்வது புனிதமானது.

சிவன் கோயிலில் இருந்து விபூதியை கூட பெரியவர்கள் எடுத்து வர மாட்டார்கள். சிவன் சொத்து குல நாசம் என சொல்லுவார்கள். திருச்சேய்ஞ்சலுார் என்னும் தலத்தில் எச்ச தத்தன் என்ற அந்தணரின் மகன் விசாரசருமர். அவர் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியவர். வேதங்கள் அனைத்தையும் கற்றவர்.

ஒரு நாள் குருவின் இல்லத்திற்கு செல்லும் வழியில் பசு மேய்ப்பவர் பசுக்களை அடிப்பதை கண்டார். அவரை விலக்கி அன்று முதல் தானே பசுக்களை மேய்க்க தொடங்கினார்.

ஆற்றங்கரையில் பசுக்களை மேய விட்டு விட்டு ஆற்று மணலில் சிவாலயம் அமைத்து சிவபூஜை செய்தார். பசுக்கள் தாமே முன் வந்து சிவபூஜைக்கு தொடர்ந்து பாலை வழங்கின. ஊரில் உள்ள ஒருவன் ஊர் மக்களிடம் தெரிவிக்க ஊர் மக்கள் விசாரசருமர் தந்தையிடம் முறையிட்டனர்.

அவரது தந்தை மறைந்திருந்து பார்த்தார். பசுக்கள் பால் வழங்குவதை கண்டு கோபமுற்ற அவரது தந்தை ஆத்திரத்துடன் தனது மகனை அடித்தார். மனது ஒருமித்து சிவ பூஜையில் ஈடுபட்டு இருந்த விசாரசருமர் அடியை உணரவில்லை.

கோபமுற்ற தந்தை பால் குடத்தை காலால் எட்டி மிதித்தார். இதனால் கோபமடைந்த விசாரசருமர் சிவ அபராதம் செய்தது தந்தையாக இருந்தாலும் அருகில் இருந்த குச்சியை அடிக்க எடுக்கவே அது மழுவாக மாறியது. தந்தையின் இருகால்களையும் சிதைத்தார்.

சிவபெருமான் காட்சி தந்து அவரின் பக்தியை பாராட்டி அவருக்கு சன்டீசர் பதவி வழங்கினார். சிவாலயங்களில் சிவ பெருமானுக்கு சார்த்தப்படும் நெய்வேதனங்கள் அனைத்தும் சன்டீசருக்கே சொந்தம்.

சிவபெருமான் அருகில் எப்போதும் தியானத்திலேயே இருப்பார். அவர் முன்பு கைதட்டுதல் கூடாது.

சன்டீகேஸ்வரர் போல் அனைவரும் மனமுருகி உறுதியுடன் சிவவழிபாடு செய்ய வேண்டும், என பேசினார்.






      Dinamalar
      Follow us