ADDED : ஜன 02, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை விடுதி ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோபால் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் ராமாயி, சிலம்பராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்குமார் தீர்மானத்தை வாசித்தார்.
மாவட்ட செயலாளர் இளையராஜா அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் வினோத்குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாலதி நன்றி கூறினார்.

