ADDED : அக் 27, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : காரைக்குடி கழனிவாசல் போக்குவரத்து நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர்முருகேசன் 56. தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார்.
இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். முருகேசனின் வீட்டின் அருகே உள்ளவர்கள் முருகேசனின் வீடு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.