/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மழைக்கு வீடுகள் சேதம்
/
காரைக்குடியில் மழைக்கு வீடுகள் சேதம்
ADDED : அக் 28, 2024 07:12 AM

காரைக்குடி, : காரைக்குடி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததோடு, வீடுகள் பலவும் இடிந்து விழுந்தது.
காரைக்குடி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்பட்ட
பாதிப்பில் இருந்து மக்கள் மீள முடியாத நிலையில் தற்போது தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
காளவாய் பொட்டால், அன்னை தெரசா தெரு, தேவர் குடியிருப்பு, என்.எஸ்.கே., தெரு, பருப்பூரணி, குட்செட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
பாதாளச் சாக்கடை குழாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் ஓடுகிறது.
அதிக அளவில் மழை பெய்தும், மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் கழிவு நீர் கால்வாய் வழியாக மழைநீர் வீணாகி வருகிறது.
அமராவதி புதூர், கழனிவாசல் உட்பட பல பகுதிகளிலும், தொடர் மழையால் வீடுகள் சேதமானது.
சேதமடைந்த வீடுகளை அதிகாரியின் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.