/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் அயிரை மீன் அமோக விற்பனை
/
மானாமதுரையில் அயிரை மீன் அமோக விற்பனை
ADDED : பிப் 13, 2024 06:52 AM

மானாமதுரை : மானாமதுரை வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அயிரை மீன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து 3 மாதங்களாக வைகை ஆற்றில் தண்ணீர் சென்றதால் தற்போது வைகை ஆற்றுக்குள் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த தண்ணீரில் சிலர் மீன்களை பிடித்து வருகின்றனர். முக்கியமாக அயிரை மீன் இப்பகுதியில் ஒரு கிலோ ரூ. 1400 முதல் ரூ.1800 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
மீன் பிரியர்களால் விரும்பப்படும் அயிரை மீன் மிகவும் ருசியாக இருப்பதால் இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் ஏராளமானோர் வாங்கி வருகின்றனர்.
வியாபாரி சேகர் கூறுகையில், மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பலர் பண்ணைகளில் இந்த அயிரை மீனை வளர்த்து வருகின்றனர். ஆனால் இந்த மீன்களில் ருசி அதிகமாக இருக்காது.
ஆற்றுக்குள் பிடிக்கப்படும் அயிரை மீனுக்கு ருசி அதிகம் என்பதால் அதன் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் மீன் பிரியர்கள் அதனை வாங்கி வருகின்றனர்.
தற்போது மானாமதுரை சுற்றுவட்டார வைகை ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் கிடைக்கும். அயிரை மீன்களை பொறுமையாக இருந்து பிடித்து வருகிறோம்.
ஒரு நாளைக்கு ஒரு கிலோவிலிருந்து 2 கிலோ வரை பிடித்து வருகிறோம் என்றும் மானாமதுரை வைகை ஆற்றுப்பகுதிகளில் கிடைக்கும் அயிரை மீனுக்கென்று தனி மவுசு உள்ளதாக கூறினார்.