/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாழடைந்த ஒன்றிய அலுவலக கட்டடத்தில் நுாறு நாள் வேலை திட்ட அலுவலக பிரிவு ஊழியர்கள் குமுறல்

ADDED : டிச 07, 2024 06:18 AM
மானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடத்தில் 100 நாள் வேலைத்திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அறைகள் ஒதுக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் சேதமடைந்ததை தொடர்ந்து 2 வருடங்களுக்கு முன்பு தற்போதுள்ள அலுவலக கட்டடத்துக்கு அருகில் இருந்த காலி இடத்தில் புதிதாக அலுவலக கட்டடம் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு அலுவலகம் மாற்றப்பட்ட போது பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை திட்ட அலுவலக பிரிவு மட்டும் புதிய கட்டடத்திற்கு இன்னும் மாற்றப்படாமல் உள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கூறியதாவது: தற்போது அனைத்து பிரிவு அலுவலகங்களும் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் துறை பிரிவின் முக்கிய அலுவலக பிரிவான 100 நாள் வேலைத்திட்ட பிரிவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் 2 அலுவலர்கள், 5 கணினி இயக்குபவர்கள் பணியாற்றி வரும் நிலையில் எங்களுக்கான அலுவலகம் மட்டும் புதிய கட்டடத்திற்கு மாறாமல் பழைய கட்டட அலுவலகத்திலேயே செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய கட்டடத்திற்கு 100 நாள் வேலைத்திட்ட பிரிவு அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.