/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை பணிநியமனம் ரத்து கோரி அக்., 28 ல் உண்ணாவிரதம்

ADDED : செப் 29, 2025 06:16 AM
சிவகங்கை : மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை பணிநியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அக்., 28 ல் உண்ணாவிரதம் இருக்கப்படும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் கிறிஸ்டி பொன்மணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,
மருத்துவத் துறையில் ஒப்பந்த மற்றும் அத்தக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும். எம்.ஆர்.பி.,தொகுப்பூதிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறத்தி, அக்., 14 ல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய உள்ளோம். அக்.28ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது. சட்டசபை கூட்டத்தின் போது அனைத்து கட்சியினரையும் சந்தித்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்க முடிவுசெய்துள்ளோம், என்றார்.