/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேயரிடம் இருக்கும் பணம் கூட என்னிடம் இல்லை: கார்த்தி எம்.பி.,
/
மேயரிடம் இருக்கும் பணம் கூட என்னிடம் இல்லை: கார்த்தி எம்.பி.,
மேயரிடம் இருக்கும் பணம் கூட என்னிடம் இல்லை: கார்த்தி எம்.பி.,
மேயரிடம் இருக்கும் பணம் கூட என்னிடம் இல்லை: கார்த்தி எம்.பி.,
ADDED : டிச 14, 2025 06:11 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள தளக்காவூரில் துாய்மை பணிக்கான வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கார்த்தி எம்.பி.,, தொகுதி மேம்பாட்டு நிதியில் வாகனத்தை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாங்குடி எம்.எல்.ஏ, மேயர் முத்துத்துரை, கமிஷனர் சங்கரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனது வாகனத்தில் இருந்து இறங்கிய கார்த்தி எம்.பி.,க்கு மேயர் முத்துத்துரை சால்வை அணிவித்த போது, வண்டி கொடுத்து விட்டேன். குப்பையை அள்ளணும் என்றார். அள்ளி விடுவோம் என்று தெரிவிக்க, கார்த்தி எம்.பியோ, எங்க அள்ளுகிறீர்கள், ஊர் சுத்தமாக இல்லையே என்றார்.
மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவர், எங்கள் பகுதிக்கும் ஒரு வண்டி வேண்டும் என்றார். எங்கிட்ட அவ்வளவு பணம் எங்கே இருக்கு. மேயரிடம் இருக்கும் பணம் கூட என்னிடம் இல்லை, நான் ஆறு தொகுதியையும் பார்க்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சென்றார்.