/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இடைக்காட்டூர் சர்ச்சில் ரூ.1.57 கோடியில் மராமத்து
/
இடைக்காட்டூர் சர்ச்சில் ரூ.1.57 கோடியில் மராமத்து
இடைக்காட்டூர் சர்ச்சில் ரூ.1.57 கோடியில் மராமத்து
இடைக்காட்டூர் சர்ச்சில் ரூ.1.57 கோடியில் மராமத்து
PUBLISHED ON : டிச 10, 2025 09:07 AM

மானாமதுரை: இடைக்காட்டூரில் 1894ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கோதிக் கட்டடக்கலையில் கட்டப்பட்ட திரு இருதய ஆண்டவர் சர்ச் உள்ளது.
இடைக்காட்டூரை அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பகுதியாக அறிவித்தது. பழமை மாறாமல் சர்ச்சை புதுப்பிக்க தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருங்காட்சியகம் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தற்போது சர்ச் வளாகம் முழுவதும் வர்ணம் பூசும் பணி மற்றும் பழமை மாறாமல் சேதமடைந்த கண்ணாடிகளை புதுப்பிப்பது, மேற்புறம் உள்ள ஓடுகளில் மழை நீர் தேங்காதவாறு அதற்கு மேல் மெல்லிய தகடுகளை கொண்டு மழை நீரை வெளியேற்றுவது, கிரானைட் கற்களில் பாலிஷ் போடுவது, ஒலி, ஒளி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.