/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பையில் கொட்டப்பட்ட பொதுமக்களின் அடையாள அட்டைகள், ஆவணங்கள்
/
குப்பையில் கொட்டப்பட்ட பொதுமக்களின் அடையாள அட்டைகள், ஆவணங்கள்
குப்பையில் கொட்டப்பட்ட பொதுமக்களின் அடையாள அட்டைகள், ஆவணங்கள்
குப்பையில் கொட்டப்பட்ட பொதுமக்களின் அடையாள அட்டைகள், ஆவணங்கள்
ADDED : ஏப் 05, 2024 03:02 PM

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய, பல்வேறு அடையாள அட்டைகள், ஆவணங்கள் குப்பையில் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இங்குள்ள சிறுவர் பூங்கா அருகே உள்ள கட்டடத்தில் பழைய வடசிங்கம்புணரி வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டது. கட்டடம் பழுது காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு இடத்திற்கு அலுவலகம் மாற்றப்பட்டது. இந்நிலையில் பழைய கட்டடத்தை ஒட்டிய குப்பையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய அடையாள அட்டைகள், முக்கிய ஆவணங்கள் அடங்கிய மூடைகளை யாரோ போட்டு சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும் வருவாய்த்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கடந்த 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய வாக்காளர் அடையாள அட்டைகள், மருத்துவ காப்பீடு, உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நலத்திட்ட அடையாள அட்டைகள், சீர் மரபினர் உள்ளிட்ட சாதிச் சான்றிதழ்கள் என பல்வேறு ஆவணங்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

