/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி அம்மா உணவகத்தில் இட்லி 'கட்'
/
காரைக்குடி அம்மா உணவகத்தில் இட்லி 'கட்'
ADDED : ஜன 18, 2025 07:29 AM
காரைக்குடி: காரைக்குடி அம்மா உணவகத்தில் கடந்த 3 மாதங்களாக இட்லி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தினமும் பொங்கல் மட்டுமே விற்கப்படுவதால் வயதானவர்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடியில் கோர்ட் அருகில் அம்மா உணவகம் 2015ல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.ஏழைகள், பள்ளி செல்லும் குழந்தைகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக வயதானவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
காலையில் இட்லி அல்லது பொங்கல், மதியம்தயிர்சாதம் மற்றும் சாம்பார் அல்லது புளி சாதம் விற்கப்படுகிறது. தினமும் 900 க்கும் மேற்பட்டோர் உணவருந்தி வருகின்றனர். இந்த அம்மா உணவகத்தில் காலை இட்லி 3 மாதமாக விற்கப்படவில்லை. மாவு அரைக்கும் இயந்திரம் பழுதானதால் வழங்க முடியவில்லை என்று பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குமார் கூறுகையில், வயதானவர்களும், ஆதரவற்றவர்களும் அதிகம் அம்மா உணவகத்தையே நம்பி உள்ளனர். மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ளும் வயதானவர்கள், தினமும் பொங்கல் சாப்பிடுவதால் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.வயதான மக்களுக்கு முறையான உணவு கிடைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.