/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் அருகே கோயிலில் சிலைகள் சேதம்
/
திருப்புத்துார் அருகே கோயிலில் சிலைகள் சேதம்
ADDED : நவ 22, 2025 03:14 AM

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சிலைகள் மர்மநபர்களால் சேதமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் பழமையான திருவெற்றிநாதர் -புவனேஸ்வரி அம்மன்கோயில் உள்ளது. அழகான வேலைப்பாடுகளுடைய சிற்பங்கள் கொண்ட கோயில். இக்கோயிலில் காலையில் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும். கோயில் பூட்டப்படும் வழக்கம் இல்லை என கூறப்படுகிறது. நேற்று காலை 9:00 மணி அளவில் சிவாச்சாரியார் கோயிலுக்குள் சென்ற போது நவக்கிரகங்களில் சூரியன் மற்றும் துர்க்கை கற்சிலைகள் சேதமடைந்த நிலையில் சிலைகளை பெயர்க்க முயற்சித்துள்ளதும் தெரிந்தது. கண்டவராயன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

