sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 புறக்கணிப்பு ...காவிரி குண்டாறு இணைப்பில் சிங்கம்புணரி :தேசிய நீர் இணைப்பிலும் விடுபடும் வாய்ப்பு

/

 புறக்கணிப்பு ...காவிரி குண்டாறு இணைப்பில் சிங்கம்புணரி :தேசிய நீர் இணைப்பிலும் விடுபடும் வாய்ப்பு

 புறக்கணிப்பு ...காவிரி குண்டாறு இணைப்பில் சிங்கம்புணரி :தேசிய நீர் இணைப்பிலும் விடுபடும் வாய்ப்பு

 புறக்கணிப்பு ...காவிரி குண்டாறு இணைப்பில் சிங்கம்புணரி :தேசிய நீர் இணைப்பிலும் விடுபடும் வாய்ப்பு


ADDED : நவ 22, 2025 03:02 AM

Google News

ADDED : நவ 22, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி:காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி புறக்கணிக்கப்பட்ட நிலையில், தேசிய நதிநீர் இணைப்பிலும் விடுபட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

காவிரியில் வீணாகும் நீரை வைகை வழியாக குண்டாறுடன் இணைக்க பல ஆண்டு கோரிக்கை உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி நீரை திருப்பி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் பயன் பெறும். முதலில் மணப்பாறை வழியாக கால்வாய் வெட்டி புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாலாறு, மேலுார் அருகே மணிமுத்தாறு, வைகை ஆகியவற்றில் இணைப்பதன் மூலம் மேற்கண்ட மாவட்டங்களின் முழுப் பகுதியும் பயன்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாயனுார் கதவணையில் இருந்து நேராக கிழக்கு நோக்கி புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை கொண்டு சென்று, அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றுடன் இணைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் பள்ளபட்டி அருகே பாலாற்றுடன் இணைக்கப்பட்டால் முழு திருப்புத்துார் தொகுதியும் பயன்பெறும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், சிங்கம்புணரி, எஸ்.புதுார், திருப்புத்துார் பகுதிகளை தவிர்த்து வெளியான திட்ட அறிவிக்கையும், மதிப்பீடும் இப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இப்பகுதி விவசாயிகள் முறையிட்டதன் பேரில் பள்ளபட்டி அருகே பாலாற்றில் இணைக்கும் விதமாக மற்றொரு கால்வாய் அமைக்க திட்டம் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றது. ஆனால் இன்று வரை திட்டத்தில் சிங்கம்புணரி பகுதியை சேர்ப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் நிறைவேற்றப்படும் சிறிய நதிநீர் இணைப்பு மூலமாகவே பிற்காலத்தில் தேசிய நதிநீர் வழித்தடமும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் காலங்களில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்புத்தூர் பகுதிகள் இத்திட்டத்தில் பயன்பெறாமல் பாலைவனமாக போகும் என அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

அ.தனசேகர், தே.மு.தி.க., திருப்புத்துார் தொகுதி பொறுப்பாளர்; காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், சிங்கம்புணரி உள்ளிட்ட ஒட்டுமொத்த திருப்புத்தூர் தொகுதியும் பயன்பெறும் வகையில் மதுரை மாவட்டம் பள்ளபட்டி அருகே பாலாறு, ஏரியூர் செல்லும் மணிமுத்தாறு ஆகியவற்றுடன் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட திட்ட அறிக்கை படி திருப்புத்தூருக்கு அப்பால் 15 கி.மீ., தொலைவில் வழித்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் திருப்புத்தூர் தொகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட உள்ளது.

நதிநீர் இணைப்பு சாத்தியமான அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் திட்டம் இருக்க வேண்டும். எனவே கூடுதல் திட்டமாக மாயனுார் கதவணையிலிருந்து திருப்புத்தூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாவட்டம் பள்ளபட்டி அருகே பாலாறு, அதைத் தொடர்ந்து மணிமுத்தாறு ஆகியவை வழியாக வைகை வரை கால்வாயை கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்தால் மேலூர், சிங்கம்புணரி, திருப்புத்தூர், மணப்பாறை தாலுகாக்கள் முழு பயன்பெறும். புறக்கணிக்கப்படும் பட்சத்தில், திருப்புத்தூர் தொகுதி மட்டும் வறட்சிக்கு இலக்கானப் பகுதியாக மாறிவிடும். எனவே இப்பகுதிக்கு என்று தனி நீர்வழித்தடம் உருவாக்கி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்துடன் ஒரே நேரத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us