/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொள்கை இல்லாவிட்டால் கூட்டணி எதற்கு
/
கொள்கை இல்லாவிட்டால் கூட்டணி எதற்கு
ADDED : ஜூன் 28, 2025 11:41 PM
காரைக்குடி:காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
கொள்கை வேறு கூட்டணி வேறு என்று தினகரன் மட்டுமல்ல பல தலைவர்கள் சொல்கின்றனர். கொள்கை இல்லை என்றால் எதற்காக கூட்டணி. கெஜ்ரிவால், மம்தா எந்த கூட்டணி வைத்து வென்றனர். மக்களை நம்பாதவர்களுக்கு தான் கூட்டணி நம்பிக்கை. கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்தால் அது நியாயம் என்று நினைக்கின்றனர். என்னை சந்திக்கும் மக்கள் யாருடனும் கூட்டணி வைக்காதே என்கின்றனர்.
கொள்கையும் நோக்கமும் தான் வழி நடத்தும். எல்லா மாநிலத்திலும் கள் இறக்கும் போது தமிழகத்தில் மட்டும் தடை ஏன். பனை மரத்தை ஜாதி மரம் என்று கட்டமைக்கின்றனர். போதை பொருள் பயன்படுத்தியவர்கள் குற்றவாளி என்றால் விற்றவன் எங்கே. நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உண்மையிலேயே அப்பாவிகள் என்றார்.