/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசையை கட்டுப்படுத்தி, உறுதியுடன் இருந்தால் இறையருள் பெறலாம்: சொற்பொழிவில் கருத்து
/
ஆசையை கட்டுப்படுத்தி, உறுதியுடன் இருந்தால் இறையருள் பெறலாம்: சொற்பொழிவில் கருத்து
ஆசையை கட்டுப்படுத்தி, உறுதியுடன் இருந்தால் இறையருள் பெறலாம்: சொற்பொழிவில் கருத்து
ஆசையை கட்டுப்படுத்தி, உறுதியுடன் இருந்தால் இறையருள் பெறலாம்: சொற்பொழிவில் கருத்து
ADDED : ஏப் 25, 2025 06:37 AM
தேவகோட்டை: ஆசையை கட்டுப்படுத்தி மன உறுதியுடன் இருந்தால் இறையருள் பெறலாம் என ஆன்மிக சொற்பொழிவாளர் சீனிவாசன் பேசினார்.
தேவகோட்டை பிரவசன கூட்டத்தில் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசியதாவது: மனிதன் வாழ்க்கையில் புலன்களை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும் மனிதனை வாழ்க்கை முழுவதும் அலைக்கழித்து கொண்டே இருக்கும். இதிலிருந்து தப்பிக்க இறைவன் அருளால் தான் முடியும். மண்ணாசைக்காக மகாபாரதத்தையும், பெண்ணாசைக்காக ராமாயணத்தையும் அதன் நிகழ்வுகளை காலம் காலமாக சொல்லி வருகிறோம். இதில் மண்ணாசையையும் பொன்னாசையையும் கூட வென்று விடலாம். பெண்ணாசையை துறப்பது என்பது விசுவாமித்திரர் முதலான முனிவர்களுக்கே சவாலாக அமைந்தது.
ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயரிய பண்பாட்டினை இந்தியாவில் ஆன்மிகத்துடன் சேர்த்து மக்களிடையே விதைத்தது. இந்த கட்டுப்பாட்டை உணர்த்துவதே பெரியபுராணத்தில் திருநீலகண்ட நாயனார் வரலாறு.
மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வந்த திருநீலகண்டர் சதாசர்வ காலமும் சிவபெருமான் உலக உயிர்களை காக்கும் பொருட்டு விஷத்தினை தான் ஏற்று கண்டத்தில் (கழுத்தில்) வைத்துக் கொண்ட அருளை நினைவு கூறும் வண்ணம் அந்த தியாக சீலர் பெயரான திரு நீலகண்டத்தை சதா சர்வ காலமும் திருநீலகண்டம் என சொல்லி வந்தார்.
இளமையின் வேகத்தில் ஒரு நாள் பரத்தை வீட்டிற்கு சென்று விட்டார். திரும்பி வருவதற்குள் அயலார் மூலம் செய்தியை அறிந்த மனைவி அவர் மீது கோபம் கொண்டார். மனைவியை சமாதானப் படுத்த எண்ணி மனைவியை தொட முயன்றார். திருநீல கண்டத்தின் மேல் ஆணையாக தம்மை தொடக்கூடாது என்று கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்போது முதலே எந்த ஒரு பெண்ணையும் மனத்தாலும் தொடமாட்டேன் என்று கூறியதோடு, கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் ஒருவரையொருவர் தொடாமலும், அதனை பிறர் அறியாமல் வாழ்ந்தனர்.
இறைவன் ஒரு திருவோடு ஒன்றை கொடுத்து அதனை மறைத்து திருவிளையாடல் புரிந்தார். கணவனும் மனைவியும் கையைப் பற்றி கொண்டு இந்த குளத்தில் மூழ்கி எழ வேண்டும் என இறைவன் கூறினார். அப்போது தான் தனது சபதத்தை மக்கள் முன் கூறினார்.
மூங்கில் குச்சியின் இரு புறமும் கணவனும் மனைவியும் தொட்டபடியே குளத்தில் மூழ்கி எழுந்த போது சபதம் செய்த காலத்தில் இருந்த இளமை தோற்றத்தில் வந்தனர். மக்கள் வியந்தனர். இறைவன் காட்சி தந்து உலகில் வாழ்ந்து தர்மம் செய்து தன்னை வந்து அடையுமாறு கூறினார். சிதம்பரத்தில் இன்றும் இளமையாக்கினார் கோவில் உள்ளது. மன உறுதி எனும் வைராக்கியத்தில் இளமையை வென்ற வரலாறு இது. ஆசைகளை துறந்து இறையருள் பெறலாம் என்றார்.