/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழாய் பதிப்பால் மறைந்த சாலை வாகனம் பதிந்ததால் பாதிப்பு
/
குழாய் பதிப்பால் மறைந்த சாலை வாகனம் பதிந்ததால் பாதிப்பு
குழாய் பதிப்பால் மறைந்த சாலை வாகனம் பதிந்ததால் பாதிப்பு
குழாய் பதிப்பால் மறைந்த சாலை வாகனம் பதிந்ததால் பாதிப்பு
ADDED : அக் 16, 2024 05:28 AM

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள பலவான்குடி ஊராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பு பணியால், சாலைகள் முற்றிலும் சேதமானதோடு, வாகனங்கள் சகதியில் பதிந்து கொள்வதால் போக்குவரத்து பாதிப்பு தொடர்கதையாகி வருகிறது.
கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட பலவான்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய சாலை போடப்பட்டது.
புதிய சாலை பணி முடிந்த நிலையில் சூரக்குடி முதல் குன்றக்குடி வரை காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. இதனால் புதிதாக போடப்பட்ட சாலை உடைக்கப்பட்டது. சாலை காணாமல் போனதோடு மண்சாலையாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வருவதோடு, வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
தவிர லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது சகதியில் சிக்கி பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்க வேண்டிய அவலம் நிலவுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளிக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடைக்கப்பட்ட சாலையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.