/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சி.பி.ஐ., அதிகாரி போல பேசி ரூ.19 லட்சம் நுாதன மோசடி
/
சி.பி.ஐ., அதிகாரி போல பேசி ரூ.19 லட்சம் நுாதன மோசடி
சி.பி.ஐ., அதிகாரி போல பேசி ரூ.19 லட்சம் நுாதன மோசடி
சி.பி.ஐ., அதிகாரி போல பேசி ரூ.19 லட்சம் நுாதன மோசடி
ADDED : அக் 25, 2025 01:58 AM
காரைக்குடி: சி.பி.ஐ., அதிகாரி போல பேசி, 19 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அச்சகம் நடத்துபவர் அண்ணாமலை, 50. இவரிடம், அக்., 14ல் வாட்ஸாப் அழைப்பில் பேசியவர், தன்னை மும்பை சி.பி.ஐ., அதிகாரி தயாநாயக் என அறிமுகம் செய்து, 'உங்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதிந்து, ' டிஜிட்டல் அரஸ்ட்' செய்துள்ளோம். ஆறு நாட்கள் வரை வீட்டிலேயே தனியாக இருக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
அவரது வங்கி கணக்கில் இருப்பில் உள்ள பணம் குறித்த விபரத்தை அறிந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க, 19 லட்சம் ரூபாயை மும்பையில் உள்ள தேசிய வங்கி கணக்கில் செலுத்த கூறியுள்ளார். இதை நம்பிய அவர் காரைக்குடியில் அவர் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று, அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 19 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
இது குறித்து விசாரித்து, மோசடி என அறிந்ததும், சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி விசாரிக்கிறார்.

