/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் மழையின்றி நெற்பயிரை தாக்கும் கறையான்கள்
/
இளையான்குடியில் மழையின்றி நெற்பயிரை தாக்கும் கறையான்கள்
இளையான்குடியில் மழையின்றி நெற்பயிரை தாக்கும் கறையான்கள்
இளையான்குடியில் மழையின்றி நெற்பயிரை தாக்கும் கறையான்கள்
ADDED : அக் 21, 2024 05:04 AM

இளையான்குடி: இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் நெற்பயிர்களை கறையான்கள் தாக்கி வருவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட இளையான்குடி, சாலைக்கிராமம், முனைவென்றி, சூராணம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் குண்டு மிளகாய்க்கு அடுத்த படியாக நெல் விவசாயம் அதிகளவில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்வெளிபொட்டல், தெற்கு கீரனூர், அரியாண்டிபுரம், கோட்டையூர், சிறுபாலை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் ஆகஸ்ட்டில் மானாவாரியாக நெல்விதைப்பு செய்தனர்.
போதிய மழையின்றி விதைகள் முளைக்க வில்லை. இதனால், கடந்த செப்டம்பரில் மீண்டும் 2 வது முறையாக நெல் நடவு செய்தனர். தற்போது பயிர்கள் முளைக்க துவங்கியது. இந்த வட்டாரத்தில் போதிய மழையின்றி நெற்பயிர்களை கறையான்கள் தாக்கி வருவகிறது.
இது குறித்து கல்வெளிபொட்டல் விவசாயி தங்கபாண்டியன் கூறியதாவது: ஏற்கனவே முதற்கட்டமாக ஆகஸ்டில் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் செலவழித்து நெல் நடவு செய்தோம்.
போதிய மழையின்றி நெற்பயிர்கள் முளைக்கவில்லை. தற்போது பெய்யும் மழையை நம்பி நெல் துாவியுள்ளோம்.
ஆனால், முளைத்த நெற்பயிர்களை கறையான்கள் தாக்கி வருகிறது, என்றார்.