/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் குடிநீருக்காக வரும் மான்கள் பலியாகும் நிலை
/
காரைக்குடியில் குடிநீருக்காக வரும் மான்கள் பலியாகும் நிலை
காரைக்குடியில் குடிநீருக்காக வரும் மான்கள் பலியாகும் நிலை
காரைக்குடியில் குடிநீருக்காக வரும் மான்கள் பலியாகும் நிலை
ADDED : மார் 04, 2024 05:33 AM

காரைக்குடி; காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக, தண்ணீர் தேடி வரும் மான்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி, கானாடுகாத்தான், ஆவுடை பொய்கை, அமராவதி புதூர், சங்கரபதிகோட்டை, சங்கன்திடல், கண்டனூர், சாக்கோட்டை வன பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வளர்கின்றன.
வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் மான்கள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்லும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு தண்ணீர் தேடி வரும் மான்கள் விபத்துகளில் சிக்கியும், நாய்கள் கடித்தும் உயிரிழந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மான் இறந்து கிடந்தது. நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி கால் ஒடிந்த நிலையில் கிடந்த மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் நேற்று பாரிநகர் அருகே தண்ணீர் தேடி வந்த 2 வயது ஆண் மான் உயிரிழந்தது. மான்கள் தொடர்ந்து உயிரிழப்பதை கட்டுப்படுத்த வனப்பகுதிகளில் முறையாக போர்வெல் அமைத்து குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
வனத் துறையினர் கூறியதாவது, சங்கரபதி கோட்டை பகுதியில் அதிகளவில் மான்கள் இருப்பதால் அங்கு உள்ள வனப்பகுதியில் குளங்கள் அமைத்து போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
மானகிரி பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
தற்போது வறட்சி காலம் என்பதால் குளங்களில் தண்ணீர் இல்லை. போர்வெல் இல்லாத பகுதிகளில் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

