/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 'உங்கள் சொந்த இல்லம்' திட்டம் வீடுகள் தரத்தில் சந்தேகத்தால் போலீசார் தயக்கம் விற்காத 68 வீடுகள் வீணாகிறது

ADDED : பிப் 16, 2024 05:19 AM

சிவகங்கை: சிவகங்கையில் போலீசாருக்காக உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் அவற்றை வாங்க போலீசார் தயங்குகின்றனர். கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகள் விற்கப்படாமல் வீணாகி வருகிறது.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் சார்பில் போலீசாருக்கு உங்கள் சொந்தம் இல்லம்,' திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.44 கோடியில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களுக்கு 17 வீடுகள், போலீசாருக்கு 123 வீடுகள் என மொத்தம் 140 வீடுகள் கட்டப் பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்களுக்கு 1,292 சதுர அடி மனையிடமும், அதில் 850 சதுர அடியில் 2 படுக்கை அறை கொண்ட வீடும் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் விலை ரூ.26 லட்சம்.
அதேபோல் போலீசாருக்கு 1,162 சதுர அடி மனையிடமும், அதில் 655 சதுர அடியில் 2 படுக்கை அறை கொண்ட வீடும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ரூ.20 லட்சம் விலை. வீடுகள் கட்டும் பணி 2019ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. கொரோனா காலத்தால் பணியில் தாமதம் ஏற்பட்டு 2022ல் கட்டுமான பணி முழுவதுமாக முடிக்கப்பட்டது.
வீடுகளின் கட்டுமான பணி முடிந்த நிலையில் தரம் குறித்த சந்தேகம் இருப்பதால் வீடுகளை வாங்க போலீசார் பலர் தயக்கம் காட்டுகின்றனர். கட்டி முடிக்கப்பட்ட 140 வீடுகளில் 72 வீடுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 68 வீடுகள் விற்காமல் உள்ளது.
காவலர் வீட்டு வசதிக்கழக இணை பொறியாளர் மாயக்கிருஷ்ணன் கூறுகையில், வீடுகள் தரமாகக் கட்டப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது அனைத்து வீடுகளும் முழுமையாக முழு தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ., வீடுகளில் 17 வீடுகளில் 15 வீடுகள் விற்கப்பட்டுள்ளது. இரண்டு வீடு மட்டும் தான் பாக்கியுள்ளது. போலீசார் வீடுகளிலும் 72 வீடுகள் விற்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வீடுகளும் விற்கப்படும் என்றார்.