/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை தொகுதியில் தி.மு.க., குழுவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
/
சிவகங்கை தொகுதியில் தி.மு.க., குழுவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
சிவகங்கை தொகுதியில் தி.மு.க., குழுவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
சிவகங்கை தொகுதியில் தி.மு.க., குழுவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2024 01:41 AM
சிவகங்கை : சிவகங்கை தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் சிவகங்கை தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னையில் தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியது.4வது நாளாக நேற்று தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டது.
சிவகங்கை, விருதுநகர் மாவட்ட லோக்சபா தொகுதிக்குட்பட்ட பொறுப்பு அமைச்சர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை, விருதுநகர் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது தி.மு.க., வேட்பாளர் போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.