/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆம்புலன்ஸ்சில் குவா... குவா...
/
ஆம்புலன்ஸ்சில் குவா... குவா...
ADDED : டிச 22, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே 108 ஆம்புலன்ஸ்சில் இளம்பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது. மானாமதுரை அருகே மேலநெட்டூர் சுந்தரபாண்டியன் மனைவி பிரியதர்ஷினி 25. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி எடுத்துள்ளது.
அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். அப்போது பிரசவ வலி ஏற்படவே மருத்துவ பணியாளர் ரீனா அவருக்கு, ஆம்புலன்சில் வைத்தே பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ்சில் வைத்தே பிரியதர்ஷினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
தாயும், குழந்தையும் நலமாக உள்ள நிலையில் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

