/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழைய பஸ் ஸ்டாண்ட் முன் ரோட்டை ஆக்கிரமித்த பஸ்கள்
/
பழைய பஸ் ஸ்டாண்ட் முன் ரோட்டை ஆக்கிரமித்த பஸ்கள்
பழைய பஸ் ஸ்டாண்ட் முன் ரோட்டை ஆக்கிரமித்த பஸ்கள்
பழைய பஸ் ஸ்டாண்ட் முன் ரோட்டை ஆக்கிரமித்த பஸ்கள்
ADDED : டிச 22, 2025 06:15 AM

காரைக்குடி: காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் முன் போட்டி போட்டுக் கொண்டு அனைத்து பஸ்களையும் தாறுமாறாக நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, திருவாடானை, மதுரை, திருச்சி,ராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்துார், சென்னைக்கு பஸ்கள் சென்று வருகிறது. கிராமங்களுக்கென 20 க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் செல்கின்றன. இப்பழைய பஸ் ஸ்டாண்ட் புனரமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிந்தும் பஸ் ஸ்டாண்ட் திறக்கப் படவில்லை.
இதனால் மெயின் ரோட்டிலேயே அனைத்து பஸ்களையும் நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பழைய பஸ் ஸ்டாண்டை திறந்து, வாகன நெரிசலை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

