/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வைகை ஆற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகள்
/
மானாமதுரை வைகை ஆற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகள்
மானாமதுரை வைகை ஆற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகள்
மானாமதுரை வைகை ஆற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகள்
ADDED : டிச 22, 2025 06:16 AM

மானாமதுரை டிச. 22-: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வைகை ஆற்றுப்பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் மற்றும் குப்பைகளால் சுகாதாரத் கேடு ஏற்பட்டு வருகிறது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் இருக்கும் தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பெரும்பாலும் வைகை ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை தாயமங்கலம் ரோட்டில் உள்ள மாங்குளம் அருகே உள்ள வள மீட்பு பூங்காவில் தேக்கி வைக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிற நிலையில் ஒரு சில தூய்மை பணியாளர்கள் வைகை ஆற்றை ஒட்டி உள்ள பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளையும், இறைச்சி கடைக்காரர்களும் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் வைகை ஆற்றுப்பகுதி சுகாதாரக்கேடாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வைகை ஆற்றுக்குள் கழிவு நீர் விடுவதையும், குப்பைகளை கொட்டுவதையும் தடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.
ஆனால் தேனி,திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது வரை வைகை ஆற்றில் தான் கழிவு நீர் மற்றும் குப்பைகளை விட்டு வருகின்றனர். தற்போது ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக வைகை ஆற்றில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் செல்கிற நிலையில் மேற்கண்ட பகுதிகளில் குப்பை மற்றும் கழிவு நீரால் தண்ணீர் மோசமடைந்து வருகிறது. மேலும் 500க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே வைகை ஆற்றுக்குள் கழிவு நீர் விடுவதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

