/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செயல்படாத அமைச்சர் திறந்த சந்தை ரூ.ஒன்றரை கோடி செலவழித்தும் வீண்
/
செயல்படாத அமைச்சர் திறந்த சந்தை ரூ.ஒன்றரை கோடி செலவழித்தும் வீண்
செயல்படாத அமைச்சர் திறந்த சந்தை ரூ.ஒன்றரை கோடி செலவழித்தும் வீண்
செயல்படாத அமைச்சர் திறந்த சந்தை ரூ.ஒன்றரை கோடி செலவழித்தும் வீண்
ADDED : செப் 23, 2025 04:16 AM

காரைக்குடி: காரைக்குடியில் திங்கள் தோறும் நடக்கும் கணேச புரம் சந்தையில் கட்டப் பட்டுள்ள கட்டடம் பராமரிப்பின்றி காணப் படுகிறது.
காரைக்குடி கணேச புரம் சந்தைப்பேட்டையில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 6.74 ஏக்கர் பரப்பளவில் வாரச்சந்தை அமைந்து உள்ளது. வாரந்தோறும் திங்கள்கிழமை இங்கு சந்தை நடைபெறும்.
இங்கு, கட்டடம் இல்லாததால் வியாபாரிகள் மழையிலும் வெயிலிலும் சிரமம் அடைந்தனர். காம்பவுண்ட் சுவர் இல்லாத தால், பல்வேறு சமூக விரோத செயல்களும் நடந்து வந்தது. இந்நிலையில், ரூ.1.50 கோடி செலவில் 90 கடைகளுடன் கூடிய புதிய சந்தை கட்டப்பட்டது.
கடந்த சில மாதங் களுக்கு முன் அமைச்சர் பெரியகருப்பன் இந்த சந்தை வளாகத்தை திறந்து வைத்தார். 170 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில் வியாபாரிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கடையை யாருக்கு ஒதுக்கீடு செய்வதில் என்ற பிரச்னையில் சந்தை கட்டடத்தில் நடக்காமல் வெறும் காலி யிடத்தில் நடக்கிறது.
ஒன்றரை கோடி செலவில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. சந்தை வளாகம் போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.