/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மாற்றுத்திறனாளி பயிற்சியாளர் பட்டயபடிப்பு துவக்கம்
/
காரைக்குடியில் மாற்றுத்திறனாளி பயிற்சியாளர் பட்டயபடிப்பு துவக்கம்
காரைக்குடியில் மாற்றுத்திறனாளி பயிற்சியாளர் பட்டயபடிப்பு துவக்கம்
காரைக்குடியில் மாற்றுத்திறனாளி பயிற்சியாளர் பட்டயபடிப்பு துவக்கம்
ADDED : செப் 21, 2024 05:42 AM

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரியில் மாற்றுத்திறனாளி விளையாட்டு பயிற்சியாளர் பட்டய படிப்பு தொடக்க விழா நடந்தது.
இந்தியாவில் முதன் முறையாக காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பயிற்சியாளர் 2 ஆண்டு பட்டய படிப்பு தொடங்கப் பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. அழகப்பா பல்கலை துணை வேந்தர் க.ரவி தொடங்கி வைத்தார்.
சப்-கலெக்டர் ஆயுஸ் வெங்கட், தாசில்தார் ராஜா, அழகப்பா பல்கலை விளையாட்டு ஆலோசகர் திருமலைச்சாமி, பாரா ஸ்போர்ட்ஸ் சென்டர் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, துணை ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரராக பல்வேறு விருதுகளை பெற்ற, வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருது பெற்ற ரஞ்சித் குமார், முதல் முறையாக பாரிஸில் நடந்த பாராலிம்பிக்ஸில் பவர் லிப்டர் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை கஸ்தூரி, சர்வதேச மாற்றுதிறனாளி வீரர் மற்றும் பயிற்சியாளர் விஜயசாரதி ஐகான் ஆப் இந்தியா விருது பெற்ற சஞ்சய் கண்ணன் உட்பட பல வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.