/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் விழா துவக்கம்
/
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் விழா துவக்கம்
ADDED : மார் 15, 2024 11:58 PM

திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலும் ஒன்று, இங்கு பங்குனியில் பத்து நாட்கள் விமரிசையாக விழா நடைபெறும், தினசரி பல்வேறு மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி வீதியுலா வருவது வழக்கம், இந்தாண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனும் சுவாமியும் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
கொடிமரத்திற்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. காலை 10:10 மணிக்கு கொடியேற்ற வைபவத்தை பாபு பட்டர் நடத்தி வைத்தார். 20ம் தேதி ஆறாம் நாள் திருவிழா மடப்புரத்திலும், 22ம் தேதி வெள்ளிகிழமை காலை ஒன்பது மணிக்கு திருக்கல்யாணமும், 23ம் தேதி சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

