/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் குற்ற சம்பவங்கள் சிறுவர்கள் தொடர்பு அதிகரிப்பு
/
மானாமதுரையில் குற்ற சம்பவங்கள் சிறுவர்கள் தொடர்பு அதிகரிப்பு
மானாமதுரையில் குற்ற சம்பவங்கள் சிறுவர்கள் தொடர்பு அதிகரிப்பு
மானாமதுரையில் குற்ற சம்பவங்கள் சிறுவர்கள் தொடர்பு அதிகரிப்பு
ADDED : டிச 12, 2024 05:19 AM
மானாமதுரை: மானாமதுரை போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் அதிகளவில் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர்.
அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு நல்வழிப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மானாமதுரை போலீஸ் சப் டிவிஷனில் மானாமதுரை,சிப்காட்,திருப்பாச்சேத்தி, திருப்புவனம்,பழையனூர், பூவந்தி உள்ளிட்ட 6 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.இப் பகுதிகளில் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு,வழிப்பறி,பலாத்காரம், போதை பொருட்கள் விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களில் கடந்த சில மாதங்களாக 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனிற்குட்பட்ட மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் நகராட்சி ஊழியர் ஹரி பிரசாத்தை அரிவாளால் வெட்டிவிட்டு அலைபேசி மற்றும் பணத்தை பறித்து சென்ற வழக்கிலும், மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் அருகே லாரி பாடி பில்டிங் கட்டும் கம்பெனியில் வேலை பார்க்கும் மதிமாறன் என்ற தொழிலாளரை தாக்கி அலைபேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கிலும் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மானாமதுரையில் நடக்கும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது பெரும்பாலும் சிறுவர்களாகவே உள்ளனர்.இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்கள் விரைவில் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும்,மீண்டும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் இவர்களை நல்வழிப்படுத்தும் விதமாகவும், சிறுவர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டும் இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.