sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிகிச்சைக்கு நோயாளிகள் வருகை அதிகரிப்பு

/

சிகிச்சைக்கு நோயாளிகள் வருகை அதிகரிப்பு

சிகிச்சைக்கு நோயாளிகள் வருகை அதிகரிப்பு

சிகிச்சைக்கு நோயாளிகள் வருகை அதிகரிப்பு


ADDED : மே 18, 2025 12:17 AM

Google News

ADDED : மே 18, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் அரசு தாலுகா மருத்துவமனையில் அதிகளவு நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர் மாவட்ட மக்களும் பிரசவம் மற்றும் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். பிரசவ காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்காக புதிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கு தனி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் விபத்தில் சிக்கி காயமடைபவர்கள் முதல் உதவி சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்து வரப்படுகின்றனர். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என எப்போதுமே கூட்டமாக காணப்படுகிறது. தினசரி அதிகம் பேர் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவை போதிய அளவில் இல்லை. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 17 அரசு தாலுகா மற்றும் பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அதிகபட்சமாக திருப்புவனம் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 29 ஆயிரத்து 908 பேர் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து சென்றுள்ளனர். உள் நோயாளிகளாக 239 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

பெண்களை விட ஆண் நோயாளிகளே அதிகளவில் சிகிச்சை பெறுகின்றனர். மாதத்திற்கு 13 ஆயிரத்து 111 ஆண் நோயாளிகளும், 12 ஆயிரத்து 132 பெண் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

குறைந்த பட்சமாக கொத்தமங்கலம் பெண்கள் குழந்தைகள் மருத்துவமனையில் இரண்டாயிரத்து 11 பேர் மாதந்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு ஆறு மருத்துவர்களில் ஐந்து பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஐந்து செவிலியர்கள், ஒரு மருந்தாளுனர், ஒரு உதவியாளர் பணியில் உள்ளனர். ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். நோயாளிகளுக்கு போதுமான கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us