/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் பன்றிகள் அதிகரிப்பு
/
காரைக்குடியில் பன்றிகள் அதிகரிப்பு
ADDED : நவ 25, 2024 06:33 AM

காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சியில் தடையை மீறி வளர்ப்பதாலும், தெருக்களில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது.
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் பன்றி வளர்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பன்றி வளர்ப்பு குறைந்ததோடு, தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால், மீண்டும் பன்றிகள் அதிகரிக்க தொடங்கியது. காரைக்குடி சந்தை, கணேசபுரம், கிணற்றடி காளியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குப்பை, கழிவுகளை திண்பதற்கு கூட்டம் கூட்டமாக பன்றிகள் வருவதோடு தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:
பன்றியை பட்டி போட்டு வளர்க்க வேண்டும். வெளியில் திரிய விட்டால் சுகாதார கேடு ஏற்படும். பன்றிகளை பிடிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம், என்றனர்.