/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் மின்வெட்டு அதிகரிப்பு
/
தேவகோட்டையில் மின்வெட்டு அதிகரிப்பு
ADDED : நவ 24, 2025 09:25 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் மின்வெட்டு அதிகரித்து வருவதால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
தேவகோட்டையில் கடந்த2 நாட்களாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் எலக்ட்ரானிக் பொருட்கள், விளக்குகள் பழுதாகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு 11:00 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டதில்,நேற்று மறுநாள் காலை 10:00 மணிக்கு தான் வந்தது. இதனால் இரவு முழுவதும் இருளில் மூழ்கின. நடராஜபுரம் 3 வதுவீதியில் கடந்த 3 நாட்களாக இரவு 9:30 மணி முதல் மறுநாள் காலை 11:00 மணி வரை மின்வெட்டு நிலவியது. அதே நிலை தான் இறகுசேரி பகுதியிலும் இருந்தது. தொடர் மின்வெட்டால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

