/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறப்பு விழாவிற்கு தயாராகும் கொந்தகை அருங்காட்சியகம்
/
திறப்பு விழாவிற்கு தயாராகும் கொந்தகை அருங்காட்சியகம்
திறப்பு விழாவிற்கு தயாராகும் கொந்தகை அருங்காட்சியகம்
திறப்பு விழாவிற்கு தயாராகும் கொந்தகை அருங்காட்சியகம்
ADDED : நவ 24, 2025 09:25 AM

கீழடி: கீழடி அருகே கொந்தகையில் திறந்த வெளி அருங்காட்சியகம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக தயாராக உள்ளது.
தமிழகத்தில் கீழடி மற்றும் கொந்தகையில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி ஜனவரியில் தொடங்கியது. ஒரே ஆண்டில் பணிகளை முடித்து பார்வையாளர்கள் காணவழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் நடந்து வரும் நிலையில் கொந்தகையிலும் பணிகள் நடந்து வந்தன. கொந்தகையில் இதுவரை நடந்த அகழாய்வில் 161 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
10ம் கட்ட அகழாய்வின் போது 12 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அவற்றை காட்சிப்படுத்தும் பணி நடந்து வந்தது. மழை, வெயில் காரணமாக தாழிகள் தூசி படர்ந்த நிலையில் திறந்த வெளி அருங்காட்சியக பணிக்காக தூய்மை படுத்தும் பணி நடந்து வந்தது மேலும் வயல்வெளிகள், கண்மாய், குளம் ஆகியவற்றின் நடுவே கொந்தகை அகழாய்வு தளம் உள்ளதால் மழை காலங்களில் ஊற்று நீரால் தாழிகள் பாதிக்கப்பட்டன.
இதனை தடுக்கும் விதமாக அகழாய்வு தளத்தைச் சுற்றிலும் 10அடி உயரத்திலும் 430 அடி நீளத்திலும் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு சுவர் மீது இரும்பு வேலிகளும் பொறுத்தப்பட்டு தளம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் திறக்கப்படும் போது கொந்தகை திறந்த வெளி அருங்காட்சியகமும் திறக்கப்பட உள்ளது.

