/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் திரியும் கால்நடைகளால் வாகன விபத்து அதிகரிப்பு
/
ரோட்டில் திரியும் கால்நடைகளால் வாகன விபத்து அதிகரிப்பு
ரோட்டில் திரியும் கால்நடைகளால் வாகன விபத்து அதிகரிப்பு
ரோட்டில் திரியும் கால்நடைகளால் வாகன விபத்து அதிகரிப்பு
ADDED : நவ 01, 2024 05:04 AM

காரைக்குடி: காரைக்குடியில் ரோட்டில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பள்ளத்துார், கல்லல், கோட்டையூர், கோவிலுார் உள்ளிட்ட பகுதி ரோடுகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.
மாலையில் ரோட்டிலேயே அவைகள் தங்கிவிடுகின்றன. இதனால், ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தை சந்திக்கின்றன.
இது போன்று ஏராளமான விபத்துக்கள், ரோட்டில் படுத்திருக்கும்கால்நடைகளால் ஏற்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் ரோட்டில் விடப்படும் கால்நடைகளின்உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இல்லாவிடில், கால்நடைகளை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் கோசாலையில் அடைத்து வைக்க வேண்டும்.