/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் 36ல் இருந்து 48 வார்டுகளாக அதிகரிப்பு
/
காரைக்குடியில் 36ல் இருந்து 48 வார்டுகளாக அதிகரிப்பு
காரைக்குடியில் 36ல் இருந்து 48 வார்டுகளாக அதிகரிப்பு
காரைக்குடியில் 36ல் இருந்து 48 வார்டுகளாக அதிகரிப்பு
ADDED : டிச 29, 2025 06:41 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சிக்கு அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்ததால், 36 வார்டுகளில் இருந்து வார்டுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதி கரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி நகராட்சி 1988 ல் தேர்வுநிலை நகராட்சி, 2013 ல் சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நகரின் மொத்த பரப்பளவு 13.75 சதுர கி.மீ.,ஆகவும், மக்கள் தொகை 1.31 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.47.48 கோடியாக அதிகரித்தன. இதையடுத்து இந்நகராட்சியை மாநகராட்சியாக அரசு தரம் உயர்த்தியது. காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூர், கண்டனுார் பேரூராட்சிகள், சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலுார், தளக்காவூர் ஊராட்சியில் மானாகிரி ஆகிய ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டன.
மாநகராட்சி விரிவாக்கத்தால் மாநகரின் பரப்பளவு 85.68 ச.கி.மீ., மக்கள் தொகை 2.45 லட்சம், ஆண்டு வருமானம் ரூ.65.61 கோடியாக அதிகரித்துள்ளன.
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில், வார்டுகள் விரிவாக்கம் இன்றி 36 வார்டுகளில் மட்டுமே செயல்பட்டுவந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு வெளியிட்ட உத்தரவில் காரைக்குடி மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரித்து கொள்ளுமாறு தெரிவித்தது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கூறியதாவது, மாநகராட்சியுடன் இணைந்துள்ள பேரூராட்சி, ஊராட்சிகளை பரப்பளவை கொண்டு வார்டு எண்ணிக்கை 48 ஆக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
வீடுகளின் மொத்த எண்ணிக்கை, மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் விரிவாக்கம் செய்யப்படும்.
இப்பணிகள் விரைவில் நடைபெற உள்ளது என்றார்.

