/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வரத்துகால்வாயை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
/
வரத்துகால்வாயை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : டிச 29, 2025 06:41 AM
சிவகங்கை: காளையார்கோவில் மூர்த்தி நகர், புதுமுல்லை நகரில் செல்லும் வரத்துகால்வாயை பராமரித்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அம்மன் கோவில் குளத்திற்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளையார்கோவிலில் மூர்த்தி நகர், புதுமுல்லை நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கல்லல் ரோட்டை இணைக்கும் வகையில் ஒரு சாலை உள்ளது.
இந்த சாலையின் ஓரத்தில் அம்மன் கோவிலுக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் ஒரு கிலோமீட்டர் துாரத்திற்கு உள்ளது.
இந்த கால்வாய் முழுவதும் முட்புதர்கள் முளைத்து ஆக்கிரமிப்பில் உள்ளது. மழை பெய்தால் அம்மன் கோவில் குளத்திற்கு தண்ணீர் செல்ல வழியில்லை. அதேபோல் இந்த பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது.
இந்த சாலையின் வழியாகதான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, கல்லல் -- தொண்டி சாலைக்கு செல்லவேண்டும். எனவே வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும்.

