/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லலில் எரிக்கப்படும் குப்பை: சுகாதாரக்கேடு அதிகரிப்பு
/
கல்லலில் எரிக்கப்படும் குப்பை: சுகாதாரக்கேடு அதிகரிப்பு
கல்லலில் எரிக்கப்படும் குப்பை: சுகாதாரக்கேடு அதிகரிப்பு
கல்லலில் எரிக்கப்படும் குப்பை: சுகாதாரக்கேடு அதிகரிப்பு
ADDED : ஜன 14, 2025 10:20 PM

காரைக்குடி:
கல்லல் ஊராட்சியில் செயல்படாமல் கிடக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் சுகாதாரக் கேடு நிலவி வருவதாக மக்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.
கல்லல் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் வெளியாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து வருகின்றனர்.
மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். கல்லல் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் குப்பைகளை முறையாக அகற்றி, உரம் தயாரிக்க பயன்படுத்துவது இல்லை.
குப்பைகள் அள்ளாததால், ரோட்டோரங்களில் கிடக்கும் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர். இதனால், குப்பைகளில் இருந்து புகை மூட்டம் அதிகரித்து, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.