/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிகரிக்கும் பாலிதீன் குப்பை எரிப்பு திருப்புத்துாரில் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
அதிகரிக்கும் பாலிதீன் குப்பை எரிப்பு திருப்புத்துாரில் சுற்றுச்சூழல் பாதிப்பு
அதிகரிக்கும் பாலிதீன் குப்பை எரிப்பு திருப்புத்துாரில் சுற்றுச்சூழல் பாதிப்பு
அதிகரிக்கும் பாலிதீன் குப்பை எரிப்பு திருப்புத்துாரில் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : பிப் 12, 2026 05:41 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் கிராமங்கள், நகர்ப்புற குடியிருப்புக்களில் சேகரமாகும் குப்பை தெருக்களில் கொட்டப்பட்டு அங்கேயே தீ வைத்து எரிப்பது அதிகரித்து வருகிறது.
திருப்புத்துார் ஒன்றிய கிராமங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் தூய்மைப்பணியாளர்கள் குப்பை சேகரிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு நேரத்திற்கு வருவதால் குடியிருப்புவாசிகள் தற்போது தெருக்களில் குப்பை கொட்டத் துவங்கியுள்ளனர். அவ்வப்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை வாகனம் மூலம் அகற்றுகின்றனர். வாகனங்கள் வராத போது அள்ள முடியாத குப்பையை தூய்மைப் பணியாளர்கள் எரித்து சாம்பலாக்குகின்றனர். அதில் பாலிதீன் குப்பை அதிகமாக எரிக்கப்படுகிறது. விழாக்காலங்களில் சேகரமாகும் குப்பைகளும் இப்படி எரிக்கப்படுவது தொடர்கிறது.
பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது, டையாக்சின், பியூரான் போன்ற நச்சுப் பொருட்களை வெளியிட்டு, புற்றுநோய், சுவாசக் கோளாறு, நரம்பியல் பாதிப்பு மற்றும் கருவுறுதல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், அதிலிருந்து வரும் நச்சுப் புகை நிலத்தடி நீர், மண் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் குப்பைகளை எரிக்கக் கூடாது என்றாலும் எரிக்கப்படுவது தொடர்கிறது.
இதனால் சுகாதாரத் துறையினர் தூய்மைப்பணியாளர்களை குப்பைகளை எரிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, அதை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரி யுள்ளனர்.

