/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போர்வெல் அமைத்து கொடுத்த இண்டேன் காஸ் நிர்வாகம்
/
போர்வெல் அமைத்து கொடுத்த இண்டேன் காஸ் நிர்வாகம்
ADDED : மார் 14, 2024 11:45 PM
இளையான்குடி : இளையான்குடி அருகே தடியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இட்டிசேரி, பொட்டகவயல் ஆகிய கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அமைத்துக் கொடுத்த விவசாய ஆழ்துளை கிணறு துார்ந்து பயன்பாடு இல்லாமல் போனது.
தடியமங்கலம் ஊராட்சி தலைவர் நாகஜோதி சேகர் தடியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் இண்டேன் காஸ் நிரப்பும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் பம்ப் செட் அமைத்து தர வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் போர்வெல், பம்ப் செட் அமைத்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் இண்டேன் காஸ் நிரப்பும் தொழிற்சாலை மேலாளர் கவுதம், அலுவலர் சரவணன், ஊராட்சி தலைவர் நாகஜோதி சேகர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம மக்கள் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

