ADDED : டிச 17, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட இந்திய கம்யூ., பேரவை கூட்டம் நடந்தது. ஜெயகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணைச் செயலாளர்கள்வழக்கறிஞர் மருது, கோபால், மாவட்ட பொருளாளர் மணவாளன், நகரச்செயலாளர் சகாயம், ஒன்றிய செயலாளர்கள் சின்னக் கருப்பு, மாதவன், ஊராட்சி தலைவர் மலைச்சாமி கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மருத்துவக் கல்லுாரியில் பணியின் போது பணியில் இல்லாதடாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை நகர், வாணியங்குடி பகுதிகளில் புற போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் விவசாயிகளை பேச அனுமதிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.