ADDED : டிச 12, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் இந்திய கம்யூ., சார்பில் அதானி ஊழலை பாராளுமன்ற கூட்டுக்குழுவில் விசாரிக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சாத்தையா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் மருது, கோபால், மாவட்ட பொருளாளர் மணவாளன், நகரச் செயலாளர் சகாயம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் மாதவன், மோகன், ராமநாதன், முருகேசன், திருச்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.