ADDED : டிச 01, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; காளையார்கோவிலில் இந்திய கம்யூ., கட்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் தங்கராஜ் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், மாவட்ட செயலாளர் சாத்தையா, துணை செயலாளர் மருது, பொருளாளர் மணவாளன், ஒன்றிய செயலாளர் பில்லப்பன், முருகேசன், சகாயம் பங்கேற்றனர்.
மறவமங்கலத்தில் புதிததாக போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கவேண்டும். அரசு கல்லுாரி துவக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள், விவசாய பணிகளை முழுமையாக பார்வையிட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.