/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயிர்ம விவசாயத்திற்கு மானியம் இணை இயக்குனர் தகவல்
/
உயிர்ம விவசாயத்திற்கு மானியம் இணை இயக்குனர் தகவல்
ADDED : ஜூலை 10, 2025 11:43 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் உயிர்ம விவசாயத்திற்கு மானியம் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை திடல் அமைத்து செயல் விளக்க திடலாக கொண்டு சுற்றி உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் நோக்கில் மழு நேர உயிர்ம விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 16 விவசாயிகளுக்கு வழங்கப்படும். குறைந்தது 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 3 ஆண்டு உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
சிறு குறு, ஆதி திராவிடர், பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இயற்கை விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் உழவர் குழுக்கள் மூலம் தயாரித்து வழங்கிட குழுவிற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
இயற்கை வேளாண்மை செய்யவும் 12 முதல் 15 விவசாயிகள் குழு அமைக்க வேண்டும். தேர்வு செய்த குழு விபரம் வேளாண்மை இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். குழுவிற்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க தேவையான கலன்கள், நாட்டு மாடு, மூலப்பொருட்கள் பெற இந்நிதி பயன்படுத்த வேண்டும்.
சொந்த அல்லது வாடகை இடத்தில் மையம் அமைக்கலாம். தேர்வு செய்யப்படும் குழுவிற்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டு கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதுார் வட்டாரங்களில் தேர்வு செய்யப்படும், என்றார்.

