/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் விவசாயப் பணி துவக்கம்
/
சிங்கம்புணரியில் விவசாயப் பணி துவக்கம்
ADDED : அக் 23, 2024 06:16 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தொடர் மழை காரணமாக உழவுப் பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். இவ்வொன்றியத்தில் கடந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறையால் காலம், கோடை சாகுபடி பரவலாக நடக்கவில்லை.
இந்தாண்டும் மழை எந்த அளவுக்கு இருக்குமோ என்ற கவலையில் விவசாயிகள் பலர் உழவுப் பணியில் ஆர்வம் காட்டாமல் தாமதப்படுத்தினர்.
இந்நிலையில் சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவுப் பணிகளை துவக்கியுள்ளனர். முன்கூட்டியே நாற்றுகளை வளர்த்து வைத்திருந்தவர்கள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றவர்கள் தாமதமாக இப்போதுதான் உழவுப் பணிகளை செய்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பமே திருப்தியாக இருக்கும் நிலையில், டிசம்பர் கடைசி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதால் நம்பிக்கையுடன் விவசாய பணிகளை துவக்கி உள்ளனர்.