/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமம் கோயிலில் பங்குனி விழா துவக்கம்
/
சாலைக்கிராமம் கோயிலில் பங்குனி விழா துவக்கம்
ADDED : மார் 17, 2024 12:47 AM
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
ராமநாதபுரம் சமஸ்தானம்,தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வள்ளி,தெய்வானை சன்னதியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற காப்பு கட்டுதலுக்காக அதிகாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமத்துடன், ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டிய பின்னர் பக்தர்களும் காப்புக் கட்டிகொண்டனர். தேவஸ்தான செயல் அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் சாலைக்கிராமம், இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனி உத்திர திருவிழா மார்ச் 25ம் தேதி அன்று பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட உள்ளனர். ஏற்பாடுகளை சாலைக்கிராமம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

