/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி ஒன்றியத்தில் திட்டப்பணி துவக்கம்
/
இளையான்குடி ஒன்றியத்தில் திட்டப்பணி துவக்கம்
ADDED : பிப் 12, 2024 04:53 AM
இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரண்மனைக்கரை ஊராட்சியில் உணவு பாதுகாப்பு கிடங்கு கட்டடம், கலங்காதன் கோட்டை ஊராட்சியில் சந்தை கட்டடம், கட்டனுார் ஊராட்சியில் ஊராட்சி அலுவலக கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையம், சமுத்திரம் ஊராட்சியில் தெற்கு சமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையம், இளையான்குடி அருகே செந்தமிழ் நகரில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், பி.டி.ஓ.க்கள்., முத்துக்குமரன், பாலசுப்ர மணியன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன் பங்கேற்றனர்.