/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணி மண்டல நிர்வாக இயக்குநர் ஆய்வு
/
கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணி மண்டல நிர்வாக இயக்குநர் ஆய்வு
கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணி மண்டல நிர்வாக இயக்குநர் ஆய்வு
கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணி மண்டல நிர்வாக இயக்குநர் ஆய்வு
ADDED : செப் 22, 2024 05:53 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணியில் புகார் எழுந்த நிலையில் நேற்று நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை நகராட்சியில் நேற்று நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் முஜ்புர் ரகுமான் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கூட்டத்திற்கு வந்த அவர் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டார். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராமிடம் நகராட்சியின் திட்டப்பணிகள் குறித்தும், நகராட்சியில் நடைபெறக்கூடிய சுகாதார பணிகள் குறித்தும், நகராட்சிக்கு வசூல் செய்ய வேண்டிய வருவாய் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்தாண்டு நகராட்சியால் வசூல் செய்ய வேண்டிய வரி வருவாயை முழுமையாக வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
பின்னர் காந்திவீதி கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணியை ஆய்வு செய்து கழிவு நீர் கால்வாயை முறையாக துார்வாரும் படியும், பஸ் ஸ்டாண்ட் பணி குறித்து கேட்டறிந்த அவர் பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் அமைத்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
நகராட்சி சுகாதார அலுவலர் பணிமாறுதலில் சென்று விட்டதால் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் சுகாதார அலுவலர் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் கோரிக்கை வைத்தார்.
நகராட்சி மேலாளர் கென்னடி பொறியாளர் மீராஒலி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.