ADDED : ஜூலை 22, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் கலாராணி. இவர் நேற்று சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல சாக்கோட்டையில் இருந்து சிவகங்கை வந்தார். வாகனத்தை போலீஸ்காரர் சக்திவேல் ஓட்டினார்.
வாகனம் ஒக்கூர் அருகே வரும்போது ரோட்டின் குறுக்கே நாய் ஓடியது. நாய்மீது வாகனம் மோதிவிட கூடாது என்பதற்காக ஓட்டுநர் சக்திவேல் வாகனத்தை திருப்பியுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ரோட்டோரம் சரிந்தது. இதில் இன்ஸ்பெக்டர் கலாராணிக்கும், சக்திவேலுக்கும் காயம் ஏற்பட்டது.

