ADDED : ஜூன் 21, 2025 11:32 PM

சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் மனோஜ் குமார் சர்மா விழாவைத் தொடங்கி வைத்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் யோகா செய்தனர்.
காளையார்கோவில் சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் சேகர் தலைமை வகித்தார். முதல்வர் வீரபாண்டி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி கலந்து கொண்டார். உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் பயிற்சி அளித்தார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை யோகா துறை தலைவர் சரோஜா மாணவர்களுக்கு யோகா கற்றுக்கொடுத்தார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
துணைவேந்தர் க.ரவி தலைமையேற்றார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ராஜாராம் பதிவாளர் செந்தில்ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு, நிதி அலுவலர் வேதிராஜன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காரைக்குடி மண்டலம் சார்பில், காரைக்குடி அழகப்பா கல்லூரி மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது, வங்கி முதுநிலை மண்டல மேலாளர் ஷஹரேயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேது பாஸ்கரா வேளாண் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் முரளி கிருஷ்ணசாமி, துணை முதல்வர் விஷ்ணு பிரியா, கல்லூரி செயலர் கந்தப்பழம், சி இ ஓ., கோவிந்தராஜ், பேராசிரியர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ஹேமமாலினி தலைமையேற்றார்.
காரைக்குடி ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு, யோகா பயிற்சியை பயிற்சியாளர் காளீஸ்வரி மற்றும் தியான பயிற்சிகளை சுதானந்தம், ரவிச்சந்திரன், ஸ்ரீரங்க பெருமாள் வழங்கினர்.
காரைக்குடி ஐயப்பா மழலையர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மணிகண்டன் தலைமையேற்றார். தலைமையாசிரியை வித்யா கலந்து கொண்டார்.
திருப்புத்துார்: திருப்புத்துாரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மகாயோகம் யோகா பயிற்சி மையத்தின் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு டாக்டர் முருகராஜ், முன்னாள் செயற்பொறியாளர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். பேராசிரியர் பால சுப்பிரமணியன் துவக்கினார். யோகா பயிற்சியாளர் சிதம்பரம், பயிற்சி ஆசிரியர் மாணிக்கம், தற்காப்பு கலை பயிற்சியாளர் அரவிந்தன், மருத்துவத்துறை பிரேம்குமார் பங்கேற்றனர்.