/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
2025 போராட்ட ஆண்டாக மாறும் ஓய்வூதிய சங்க தலைவர் பேட்டி
/
2025 போராட்ட ஆண்டாக மாறும் ஓய்வூதிய சங்க தலைவர் பேட்டி
2025 போராட்ட ஆண்டாக மாறும் ஓய்வூதிய சங்க தலைவர் பேட்டி
2025 போராட்ட ஆண்டாக மாறும் ஓய்வூதிய சங்க தலைவர் பேட்டி
ADDED : டிச 19, 2024 05:01 AM

சிவகங்கை: குறைந்த பட்ச பென்ஷன், பழைய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 2025- போராட்ட ஆண்டாக மாறும் என சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் கே.முரளிதரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும். வயது 70 பூர்த்தியான பென்ஷனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஆட்சியில் அமர்ந்து 3.5 ஆண்டு நிறைவு பெற்றும், 10 சதவீத பென்ஷன் உயர்த்தவில்லை.
குறைந்த பட்ச பென்ஷன் ரூ.7,850 வழங்க வேண்டும். பென்ஷனர்களிடம் மாதம் ரூ.497 மருத்துவ காப்பீடு பிடிக்கின்றனர். எந்தவித சிறப்பு சிகிச்சையும் கிடைக்கவில்லை. வயது 60 கடந்த முதியோர் ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டது.
எனவே மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி ரயிலில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டிச., 3 ல் தர்ணா நடத்தினோம்.
2025 சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்த அறிவிப்பு வெளியிடாவிடில், அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக அந்த ஆண்டை போராட்ட ஆண்டாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்றார். மாநில துணை தலைவர் ஆர்.சங்கரி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

